மேற்கு ஆக்லாந்தில் குழந்தையுடன் திருடப்பட்ட வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மதியம் 1 மணிக்கு முன்னதாக Te Atatū South இல் உள்ள Blue 2 Laundromat க்கு வெளியே பின் இருக்கையில் இரண்டு மாத குழந்தையுடன் குறித்த வாகனம் திருடப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள Meadow Crescent இல் ஈகில் ஹெலிகாப்டர் வாகனத்தை கண்டுபிடிக்க உதவியது.

அப்போது குழந்தை வாகனத்தின் உள்ளே இருந்தது.

இதனையடுத்து குழந்தை மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுடன் குழந்தை பெற்றோருடன் மீண்டும் இணைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்