ஆக்லாந்தின் Manukau சாலையில் உள்ள ஒரு கடைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வணிக நிலையங்கள் சேதமடைந்தன.

இந்த தீ சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகின்ற நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 6.20 மணியளவில் Royal Oak இல் இடம்பெற்ற இந்த தீ விபத்தை அடுத்து தீ மற்றும் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.

தீயணைப்பு ஊழியர்கள் தீயை அணைக்க போராடிய போது Manukau சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது.

Takashi Japanese Kitchen என்ற கடை மோசமாக எரிந்தது மற்றும் பக்கத்திலிருந்த Royal Dumpling Yum Cha என்ற கடையும் தீயினால் சேதமடைந்தது.

இந்நிலையில் தீயை சந்தேகத்திற்குரியதாக கருதுவதாக தீயணைப்பு மற்றும் அவசரநிலை தெரிவித்துள்ளது.

ஜப்பானிய உணவகத்தில் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த தீ பரவல் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே காலை 8.20 மணிக்கு Manukau சாலை திறக்கப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்