மேற்கு ஆக்லாந்தில் காணாமல் போன இரண்டு வயது குழந்தை பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் Henderson இல் Zodiac தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமி கடைசியாக தோட்டத்தில் உடன்பிறந்த சகோதரருடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இந்நிலையில் குழந்தை பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவளது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர் .

தேடுதலில் ஈடுபட்ட அனைவருக்கும் வில்லோவின் குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்