Bay of Plenty இல் இடம்பெற்ற ஒரு மோசமான விபத்தில் பலத்த காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் Kawerau விற்கு வடகிழக்கே உள்ள Te Teko என்ற இடத்தில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

செய்தி நிருபர் - புகழ்