மேற்கு ஆக்லாந்தில் இன்று காணாமல் போன 2 வயது சிறுமியை பொலிஸார் தேடி வருகின்றனர்.

2 வயதான வில்லோ என்ற குறித்த சிறுமி இன்று மதியம் Henderson இல் Zodiac தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

அவள் கடைசியாக தோட்டத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

வில்லோ இளஞ்சிவப்பு நிற ஜெர்சி, ஜீன்ஸ் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை சாக்ஸ் அணிந்துள்ளார்.

அவளுடைய குடும்பத்தினர் அவளுக்காக நம்பமுடியாத அளவிற்கு கவலைப்படுகிறார்கள், யாராவது அவளைப் பார்த்திருந்தால் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

பொலிஸ் மற்றும் மீட்பு குழுவினருடன் ஹெலிகாப்டர் ஒன்று Swanson பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வில்லோவை கண்டவர்கள் 111 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்