Christchurch இல் மூன்று வாரங்களாக காணாமல் போன 63 வயதுடைய நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Stewart Willis என்ற குறித்த நபர் கடைசியாக St Albans இல் உள்ள Colombo தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டில் காணப்பட்டார்.

அவரது நலனில் அக்கறை இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வில்லிஸைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்