Wanaka நகரின் தெற்கே அமைந்துள்ள Cardrona Valley வில் இன்று மாலை பாராகிளைடர் (paraglider) ஒருவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.

மாலை 6 மணியளவில் Cardrona Valley சாலையில் உள்ள ஸ்னோ ஃபார்மின் அடிப்பகுதியில் பாராகிளைடர் விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இதனையடுத்து குறித்த பாராகிளைடர் மீட்கப்பட்டு Queenstown இல் உள்ள Lakes மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் அந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்