French Pass இற்கு வடக்கே ஏற்பட்ட சிறிய அளவிலான நிலநடுக்கம் மத்திய நியூசிலாந்தில் சிறிய அதிர்வை ஏற்படுத்தியது.

5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 75 கிலோமீட்டர் வடக்கே French Pass கடலில் காலை 11.53 மணியளவில் ஏற்பட்டது.

வெலிங்டன், Taranaki, Nelson மற்றும் Blenheim ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.

171 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜியோநெட் கூறுகிறது.

ஜியோநெட்டின் கூற்றுப்படி, 20,000 க்கும் அதிகமானோர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்