ஆக்லாந்தில் கில்லர் பீஸ் கும்பலிடம் இருந்து பல வாகனங்கள் மற்றும் பைக்குகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மாதம் கும்பல் உறுப்பினர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற சட்டவிரோத நடத்தைகளை இலக்காகக் கொண்டு, Tāmaki Makaurau முழுவதும் 20 தேடுதல் வாரண்டுகளை பொலிஸார் செயல்படுத்தியதாக இன்ஸ்பெக்டர் ரகானா குக் கூறினார்.

இந்த நடவடிக்கையின் போதே இவ்வாறு வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளன.

Manurewa, Clover Park, Ōtara, Flat Bush, Half Moon Bay, Māngere, Rosehill மற்றும் Papatoeto ஆகிய இடங்களில் தேடுதல் வாரண்டுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜூலை 10 அன்று ஏராளமான கும்பல் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு இறுதிச் சடங்கிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

பைக்குகள் மற்றும் வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால் தெற்கு நெடுஞ்சாலையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன, மேலும் பலர் ஆபத்தான முறையில் அல்லது சாலைக்கு தகுதியற்ற வாகனங்களில் பயணிப்பதை பொலிஸார் கண்டனர் என்று குக் கூறினார்.

இதன் விளைவாக 27 மற்றும் 28 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் 14 வாகனங்கள் மற்றும் பைக்குகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்