சிறுவர்களுக்கு வேப் பொருட்களை (Vape - சிகரெட் அல்லது நிகோடின் கலந்த நீராவியை உள்ளிழுக்க பயன்படுத்தப்படும் சாதனம்) விற்பனை செய்த கிறிஸ்ட்சர்ச்சை சேர்ந்த ஏழு வேப் சில்லறை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Te Whatu Ora Waitaha என்ற‌ அமைப்பு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 39 சில்லறை விற்பனையாளர்களிடம் கட்டுப்படுத்தப்பட்ட கொள்முதல் செயல்பாடுகளை (CPO) மேற்கொண்ட நிலையில் இவ்வாறு சிறுவர்களுக்கு வேப் பொருட்களை விற்பனை செய்த விடயம் கண்டறியப்பட்டது.

Waitaha Canterbury சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் செரில் ப்ருண்டன் கூறுகையில்..

"சிறு வயதினருக்கு வேப் பொருட்களை விற்பது சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்களின் இந்த அதிரடி நடவடிக்கைகள் இளைஞர்களை வாப்பிங் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றின் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் சிறார்களுக்கு வாப்பிங் பொருட்களை வழங்குவதைத் தடுக்க ஹெல்த் கேன்டர்பரி இந்தத் துறையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அவர் கூறினார்.