இளம் பெண்களின் புகைப்படங்களை வயது வந்தோர் இணையதளங்களில் மறுபதிப்பு செய்த நபர் ஒருவரை Marlborough பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பல இளம் பெண்களின் படங்கள் சமூக ஊடக தளங்களில் இருந்து எடுத்து, வெளிப்படையான பாலியல் சேர்க்கைகளுடன் எடிட்  செய்து, வயது வந்தோருக்கான தளங்களில் மறுபதிப்பு செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 இந்த வகையான குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, மேலும் இந்த நபரை தற்போது தடுக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் சியாரன் ஸ்லோன் கூறினார்.

நெல்சனைச் சேர்ந்த 56 வயதான இந்த நபர் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற குற்றங்கள் குறித்து 105 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

Marlborough வாசிகள் Blenheim காவல் நிலையத்தில் உள்ள டிடெக்டிவ் க்ளென் லிண்டப்புக்கு நேரடியாக தகவல் கொடுக்கலாம்.

தங்கள் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து கவலைகள் உள்ள எவரும் Netsafe மூலம் ஆலோசனையை அணுகலாம்.