கடந்த செவ்வாய்க்கிழமை (27) கிறிஸ்ட்சர்ச்சில் இன சமூகங்களுக்கான புதிய அமைச்சகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்காக கிறிஸ்ட்சர்ச் டவுன் ஹாலில் இன சமூகங்களுக்கான பன்முகப்படுத்தல் அமைச்சர் கௌரவ.பிரியங்கா  ராதாகிருஷ்ணன், இன சமூகங்களுக்கான அமைச்சகத்தின் தலைமை நிர்வாகி மெர்வின் சிங்கம்,மற்றும் கிறிஸ்ட்சர்ச் மேயர் லியான் டால்ஜியல்,பிராந்திய மேலாளர் மற்றும் சமூகம் ஒருங்கிணைப்பாளர் - அரசன் நியூசிலாந்து, திரு.ஹேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்திருந்தனர்.

Te Taumata Tapu o Ngai Tuahuriri மற்றும் Liz Kereru (Pou Manaaki, Ngāi Tūāhuriri), உள்ளூர் மன வேனுவா, ஒரு அழகான karakia,உரை மற்றும் Waiata உடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்த கொண்டாட்டத்தில் பல்வேறு சமூகங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த 160 பேர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் மெர்வின் சிங்கம் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து திரு.ஹேமு அவர்கள் (Regional Manager&community coordinator Arasan NZ-Canterbury)அமைச்சர் மற்றும் தலைமை நிர்வாகியை சந்தித்து தனது கருத்தை வெளிப்படுத்தியதுடன் அரசன் நியூசிலாந்து சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் ஒரு சில அலுவலர்களான அனுஷா குலர் - நிர்வாக இயக்குனர், ஹிஷாம் எல்டாய் - மூத்த பன்முகத்தன்மை மற்றும் ஈடுபாடு ஆலோசகர், எலின் யீ - பன்முகத்தன்மை மற்றும் ஈடுபாடு ஆலோசகர்,லீனா லாஸ்ட்ரா - பன்முகத்தன்மை மற்றும் ஆலோசகர் ஆகியோரை சந்தித்து அரசனை அறிமுகப்படுத்தினார்.

எதிர்வரும் நாட்களில் ஹேமு (Regional Manager&community coordinator Arasan NZ-Canterbury)அமற்றும் அமைச்சகத்தின் ஈடுபாடு ஆலோசகருக்கு இடையில் ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது 

இந்த சந்திப்பில் அரசன் அதன் இலக்குகளை அடைய அமைச்சகம் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி கலந்துரையாடப்படவிருக்கின்றது.

மேலும் கேன்டர்பரி இந்தியத் தமிழ்ச் சங்கத் தலைவர் விஜயகுமார் நைனாமலை (CITA) மற்றும் கேன்டர்பரி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் அந்தோணி வீரராகவன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய திரு ஹேமு அவர்கள்  (Regional Manager&community coordinator Arasan NZ-Canterbury)அரசன் நியூசிலாந்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.