கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சோபிடெல் ஹோட்டல் (sofitel hotel) துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஹெட் ஹண்டர்ஸ் கும்பலின் தலைவனை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

ஆபத்தானவனாக கருதப்படும் குறித்த கும்பலின் தலைவன் 25 வயதான பரெய்ர் பைக்காவை கைது செய்ய போலீசார் வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.

மேற்கு ஆக்லாந்துடன் பைக்கா தொடர்புகளை கொண்டுள்ள நிலையில் குறித்த நபர் பற்றிய தகவல் உள்ள எவரும் 105 இல் பொலிஸை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.