ஆக்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் கார் ஒன்று வகுப்பறையில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

ஆக்லாந்தின் North Shore இல் உள்ள Albany என்ற இடத்தில் அமைந்துள்ள Kristin பள்ளியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து காலை 8.30 மணிக்கு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி North Shore மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வேறு யாரும் காயமடையவில்லை என்று பள்ளி நிர்வாக முதல்வர் மார்க் வில்சன் தெரிவித்தார்.

கட்டிடத்திற்கு பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை, மேலும் பள்ளியில் வழக்கம் போல் பாடங்கள் தொடர்ந்தன.