Wairoa ஆற்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மாலை காணாமல் போன ஒரு நபரை தேடும் போது குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Hawke's Bay இல் உள்ள ஆற்றின் முகத்துவாரம் அருகே‌ இருவர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் ஒருவர் கரைக்கு நீந்தி வந்ததை அடுத்து மற்றுமொரு நபரை காணவில்லை.

காவல்துறை மற்றும் surf life saving குழுக்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

இந்நிலையில் இன்று ஒரு ஆணின் சடலம் அவர் கடைசியாகக் காணாமல் போன இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான அடையாளம் காணும் பணிகள் இன்னும் நடைபெறாத நிலையில், குறித்த சடலம் புதன்கிழமை காணாமல் போனவருடையது என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.