அவுஸ்திரேலியாவில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது நிலையில் நியூசிலாந்து மக்கள் நாட்டிற்குள் வரும் பயணிகளின் அறிகுறிகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

மேலும் நேற்றிரவு வரை நியூசிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நியூசிலாந்துக்குள் வரவில்லை என சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்திற்குள் குரங்கு அம்மை நுழைவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் பயணிகளிடம் நோய் அறிகுறிகளை கவனிக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் இரண்டு பேருக்கு அரிதான குரங்கு அம்மை வைரஸை கண்டறிந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸின் தலைமை சுகாதார அதிகாரி கெர்ரி சாண்ட் கூறுகையில்

இது காய்ச்சல், தசைவலி மற்றும் வலிகள் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. தலைவலி, சோர்வு மற்றும் சோம்பல் போன்ற உணர்வுகளை நீங்கள் பெறலாம், பின்னர் அதைத் தொடர்ந்து ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை அரிப்புகள் ஏற்படலாம், பெரும்பாலும் அவை முகத்தில் தொடங்குகின்றன என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், யுனைடெட் கிங்டமில் இப்போது 20 குரங்கு அம்மை தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் போர்ச்சுகலில் 23 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிளும் குரங்கு அம்மை அடையாளம் காணப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.