North island இன் Taupō ஏரியில் கடந்த மூன்று வாரங்களில் 84 சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏப்ரல் 28 முதல் ஏரியின் அடியில் 7-16 கிலோமீட்டர் ஆழத்தில் 84 சிறிய நிலநடுக்கங்களை ஜியோநெட் பதிவு செய்துள்ளது.

இவற்றில் இரண்டு நிலநடுக்கங்கள் மட்டுமே ரிக்டர் அளவுகோலில் 3க்கு மேல் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் இரண்டு குழுக்களாக உள்ளன.

இதன்படி ஏரியின் நடுவில் சில நிலநடுக்கங்களும் மற்றும் கிழக்கு கரையில் சில நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளன.

இப்பகுதியில் நிலநடுக்க திரள்கள் ஏற்படுவது பொதுவானது என்றும் ஒவ்வொரு ஆண்டும் பல பதிவுகள் இருப்பதாகவும் ஜியோநெட் கூறியது.

கடந்த 10 ஆண்டுகளில் Taupō ஏரியின் கீழ் 4200 க்கும் மேற்பட்ட நடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.