இன்று நியூசிலாந்தில் 28 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 09 பேரும், வைகாடோவில் 03 பேரும், Bay of Plenty இல் 05 பேரும், Rotorua வில் 02 பேரும்,  Wairarapa வில்  04 பேரும், Hutt Valley இலங்கை இருவரும், Canterbury இல் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர் உட்பட 34 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் 13 கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 11,236ஆகும்.

மேலும் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 14,512ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 1437 முதல் டோஸ்கள், 3842 இரண்டாவது டோஸ்கள், 630 மூன்றாவது முதன்மை டோஸ் மற்றும் 41,853 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.