இன்று நியூசிலாந்தில் 106 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் ஆக்லாந்தில் 93 பேரும், நோர்த்லேண்டில் 3 பேரும், வைகாடோவில் 8 பேரும், Whanganui இல் ஒருவரும், Canterbury இல் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 07 பேர் உட்பட 77 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 9037 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 26,957 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் 5636 முதல் டோஸ்கள், 13,998 இரண்டாவது டோஸ்கள், 253 மூன்றாவது முதன்மை டோஸ்கள் மற்றும் 7070 பூஸ்டர் டோஸ்கள் ஆகும்.