மேற்கு ஆக்லாந்தில் உள்ள Henderson இல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை Woodford அவென்யூ வளாகத்திற்கு அழைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் நபர் ஒருவரை மீட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.