ஒரு கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதில் ஒரு பாதுகாப்பு காவலர் ஒரு ஆயுதம் மூலம் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

20, 18 மற்றும் 14 வயதுடைய குற்றவாளிகள் இன்று காலை கொள்ளையிட முயற்சித்ததை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக மாவட்ட மானுகாவ் துப்பறியும் ஆய்வாளர் கிறிஸ் பாரி தெரிவித்தார்.

மூவரும் விரியில் உள்ள இன்வெரெல் அவேவில் உள்ள ஒரு சூப்பரெட்டிலிருந்து பணப் பதிவேட்டை திருட முயன்றதுடன் அதை எடுக்க முடியாதபட்சத்தில் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் மானுகாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து திருட முயற்சித்ததுடன் அருகிலுள்ள சேவை நிலையத்திலிருந்து பொருட்களைத் திருடச் சென்றதாகவும் பாரி கூறினார்.

மூன்று குற்றவாளிகளும் அருகிலிருந்த உணவு விடுதியில் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் நாளையதினம் மனுகாவ் இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 17 ஆம் திகதி எட்டாராவில் உள்ள ஆஷ்டன் டெய்ரியில் நடந்த மோசமான கொள்ளை மற்றும் ஜூலை 24 ம் மானுரேவாவில் உள்ள சவுத்மாலில் நடந்த மற்றொரு திருட்டு தொடர்பாக இந்த மூவரும் விசாரிக்கப்படுவதாக பாரி மேலும் தெரிவித்தார்.