அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகள் இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், அதற்காகப் பதிவு செய்வதற்கு அவர்களுக்குச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி முழுமையாக உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அவ்வாறு டெப் கணினிகள் வழங்குவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

 

ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் வகையில் சமூக ஊடகங்களில் இவ்வாறான செய்தி வெளியிடப்படுகின்றது.

 

எனவே கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் உத்தி யோகபூர்வ அறிவித்தல்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளு மாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அதேநேரம் டெப் கணினிகள் வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.