கிளைடில் (Clyde) இரண்டு நாய்கள் திருடப்பட்டுஅவைகள் தவறாக நடத்தப்பட்டதை தொடர்ந்து மத்திய ஓடாகோவில் (Central Otago) சாலையோரங்களில் வீசப்பட்டுள்ளன.

19 மாத ப்ளூனோஸ் ஸ்டாஃபோர்ட்ஷையரான (bluenose Staffordshire) ஆர்லோ என்ற நாயும் 13 வயதான கருப்பு ஹன்ட்வே வகை (black Huntaway) வோல்ஃப் என்ற நாயுமே திருடப்பட்டு தவறாக நடத்தப்பட்டுள்ளன.

ஜூன் 8ஆம் திகதி அன்று கிளைடில் உள்ள ஹாஸ்லெட் செயின்ட்டில் (Hazlett St) இருந்து நாய்கள் திருடப்பட்டன.

ஜூன் 13 அன்று மதியம் சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தில் வோல்ஃப் காணப்பட்டுள்ளது.

அது காயமடைந்து காணப்பட்ட நிலையில் அது தவறாக நடத்தப்பட்டதைக் குறித்தது.

இதனை தொடர்ந்து ஜூன் 17 ஆம் தேதி மாலை ஸ்பிரிங்வேல் ரோட்டின் பக்கத்தில் ஆர்லோ கண்டுபிடிக்கப்பட்டது.

அலெக்ஸாண்ட்ரா காவல்துறையைச் சேர்ந்த சார்ஜென்ட் டெரெக் எல்சன் இந்த குற்றத்தை "மோசமானது" என்று விவரித்தார்.

"ஒரு நாயைத் திருடி அதை தவறாக நடத்தும் ஒருவர் இதயமற்ற குற்றவாளி" என குற்றவாளியை சாடினார்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.