காவேராவில் உள்ள நோர்ஸ்கே ஸ்கோக்கின் டாஸ்மன் காகித ஆலை மூடப்படும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நோர்வேவை தளமாகக் கொண்ட இந் நிறுவனம், சொத்துக்களை விற்று எதிர்வரும் ஜூன் 30 க்குள் உற்பத்தியை நிறுத்தப்போவதாகக் கூறியது.

இந்த ஆலையில் சுமார் 160 பேர் பணியாற்றுகின்றனர், மேலும் அவர்களுக்கு முழு பணிநீக்க உரிமைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வ் ஸ்கோக்கின் பிராந்தியத் தலைவர் எரிக் லக் இது குறித்து தெரிவிக்கையில்....

இந்த முடிவுக்கு முக்கிய காரணம் செய்தித்தாள் தொழில்துறையின் தொடர்ச்சியான வீழ்ச்சியாகும்

"இன்றைய முடிவு பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது மற்றும் வருத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். இது ஒரு சகாப்தத்தின் முடிவு,

"செய்தித்தாள் அச்சிடுவதற்கான உள்நாட்டு சந்தை கணிசமாக சுருங்கிவிட்டது, மேலும் கொவிட் -19 சரிவை விரைவுபடுத்தியுள்ளது. ”

இந்நிலையில் ஊழியர்களுக்கு ஆலோசனை மற்றும் வெளிமாநில சேவைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

டாஸ்மன் ஆலை 1955 ஆம் ஆண்டில் செய்தித்தாள் தயாரிப்பைத் தொடங்கியது மற்றும் 15 மில்லியனுக்கும் அதிகமான டன் காகிதங்களை உற்பத்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.