கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். கே.ஜி.எஃப் போன்ற அதிரடி ஆக்‌ஷன் படத்தை எடுத்த இயக்குநரா இவர்? என்கிற கேள்வியை அந்த போட்டோவை பார்த்த அனைத்து ரசிகர்களும் எழுப்பி வருகின்றனர். பச்சப் புள்ள தோத்துடும் இப்படியா ஊசி போட பயப்படுவீங்க என ரசிகர்கள் கேலி செய்து கலாய்த்து வருகின்றனர்.