சீனாவில் பிரபல தடுப்பூசி விஞ்ஞானியான சென் வெய் கண்டுபிடித்துள்ள கொரோனா நேசல் வேக்சினுக்கு அந்த நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை அடுத்து அது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேசல் தடுப்பூசி என்பது சுவாச முறையில் உட்கொள்ளப்படும் தடுப்பு மருந்தாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பூசி மருந்தின் ஐந்தில் ஒரு பங்கு அளவே இதில் பயன்படுத்தப்படுகிறது. நெபுலைசர் வழியாக இந்த தடுப்பு மருந்தை எடுக்கும் போது, உடலின் செல்களில் மட்டுமின்றி அது சுவாச குழாய் மற்றும் நுரையீரல் பகுதிகளில் தங்கி நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் என சென் வெய் தெரிவித்துள்ளார்.