ஆக்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை 1ல் இரண்டு வாகனங்கள் மோதுண்டு தீப்பிடித்ததை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று மாலை 4 மணியளவில் McPherson Way க்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து Wellsford வழியாக நெடுஞ்சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்