இந்தியா: தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டம் காட்டுரில் கலைஞர் கோட்ட திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அவர் பேசுகையில் தலைவராகவே திருவாரூரில் என் தந்தை பிறந்தார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்திருக்கும் தேஜஸ்வி யாதவுக்கு நன்றி. என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாக நான் கருதுகிறேன்.

இந்த விழாவில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு பணியாற்றி பாஜக அரசுக்கு முடிவு தட்ட வேண்டும். பாஜக பரப்ப வரும் காட்டுத்தீயை ஜனநாயகத்தின் விளக்கு மூலம் அணைக்க வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் 3000, 4000 ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். கலைஞருடைய உயிரினும் உயிரான உடன்பிறப்புகள் இதை செய்யாவிட்டால் வேறு யாராலும் இதை செய்ய முடியாது.

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது, தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே கேடாக அமைந்துவிடும். தமிழகத்தில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். வரும் 24 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஜனநாயக விளக்கு ஏற்றப்படும். நானும் அதில் பங்கேற்கிறேன். நாளை நமதே, நாற்பதும் நமதே என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.