சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை வைத்து டிக் டொக் பிரபலம் ஒருவர் தொலைக்காட்சி வாங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களிலிருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு அவர் டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும்,

ஒவ்வொரு வாரமும் 210 முதல் 263 டொலரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. என்னுடைய மகளுக்காக தொலைக்காட்சி வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன்.

வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார்.