நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகரின் மறைவுக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

இதனையடுத்து கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டுள்ள மீனா தற்போது ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

படப்பிடிப்பில் மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.