தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விக்ரம் என கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை அமலா பால். . இவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா படங்களில் நடித்த நிலையில் அவரை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதனை தொடர்ந்து சினிமாவில் தனது ஆர்வத்தை திரும்பிய அமலா பால், தொடர்ச்சியாக படங்களில் கமிட்டாகி நடித்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி திடீரென தனது நீண்ட கால நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து இன்பதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்தார் அமலா பால்.

இந்நிலையில் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அமலா பால்,ஜெகத் தேசாய் இருவரும் பாரம்பரிய முறைப்படி தங்கள் இல்ல வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தி முடிந்துள்ளனர். இது தொடர்பான போட்டோஸ் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.