Napier இற்கு அருகே காலை 10.10 மணியளவில் ஒரு லாரியும் காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றொருவர் மிதமான காயங்களுக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து நேப்பியருக்கு வடக்கே Wairoa வை நோக்கிய பிரதான சாலை மூடப்பட்டது.

இதனிடையே Queenstown இல் உள்ள Crown Range சாலையில் ஒரு கடுமையான விபத்து இடம்பெற்றுள்ளது.

பிற்பகல் 3.20 மணியளவில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாகன சாரதிகள் வேறு பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.