தெற்கு ஆக்லாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி 
 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் எச்சங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தென்கொரியாவில் கைது செய்யப்பட்டு நியூசிலாந்திற்கு நாடு கடத்தப்பட்ட 42 வயது பெண் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நியூசிலாந்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் அந்த பெண்ணை நியூசிலாந்திற்கு கொண்டு வருவதற்காக தென் கொரியாவிற்குச் சென்றனர்.

இந்நிலையில் குறித்த பெண் இன்று பிற்பகல் ஆக்லாந்து விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் Manukau பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நாளைய தினம் Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15 அன்று தென் கொரியாவில் உள்ள உல்சானில் அப்பெண் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் உயிரிழந்த குழந்தைகளின் தாயார் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.