நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 24,068 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது நவம்பர் 14 திங்கள் முதல் நவம்பர் 20 ஞாயிறு வரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 40 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தையும் அடங்கும்.

இந்நிலையில் உயிரிழந்த 40 பேரில் ஒருவர் 50 வயதுக்குட்பட்டவர், 05 பேர் 60 வயதுக்குட்பட்டவர்கள், 8 பேர் 70 வயதுக்குட்பட்டவர்கள், 15 பேர் 80 வயதுக்குட்பட்டவர்கள், 10 பேர் வயது 90க்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 10 வயதுக்குட்பட்ட குழந்தை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் 22 பேர் ஆண்கள் மற்றும் 18 பேர் பெண்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நேற்று நள்ளிரவு நிலவரப்படி தீவிர சிகிச்சை பிரிவில் 03 பேர் உட்பட 344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.