சட்டவிரோத நடத்தைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நியூசிலாந்து காவல்துறையின் நடவடிக்கையான 'Operation Cobalt' இன் ஒரு பகுதியாக நெல்சனில் மூன்று கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகள் மூலம் கில்லர் பீஸ் கும்பல் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக Tasman CIB இன் துப்பறியும் சார்ஜென்ட் நிக் பர்லேன் கூறினார்.

கில்லர் பீஸ் உறுப்பினர்களின் சட்டவிரோத நடத்தையை இலக்காகக் கொண்டு, Tasman CIB இன் ஆதரவுடன் நெல்சன் குற்றத்தடுப்பு பிரிவினால் கைது வாரண்டுகள் செயற்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 42 மற்றும் 20 வயதுடைய இருவர் Nelson மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மெத்தாம்பேட்டமைன்  வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

மற்றொரு நபர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்