தெற்கு வைகாடோவில் உள்ள Lichfield என்ற இடத்தில் மாநில நெடுஞ்சாலை 1ல் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

Pine சாலை சந்திப்பிற்கு அருகே குறித்த கார் விபத்துக்குள்ளானதை அடுத்து மாநில நெடுஞ்சாலை 1 மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.