வெலிங்டனில் நேற்றிரவு இடம்பெற்ற வேர்ல்ட் ஆஃப் வேரபிள் ஆர்ட்ஸ் (WOW) என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆடையை மாடலிங் செய்து‌ பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் மேடையில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சியை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் ஆர்டெர்ன் தெரிவித்தார்.

கொவிட் தொற்று காரணமாக இரத்து செய்யப்பட்ட குறித்த நிகழ்வு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெறுவதை
கொண்டாடும் வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஒரு துண்டை அணிந்து மேடையில் தோன்றி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார் பிரதமர் ஆர்டெர்ன்.

 பிரதம மந்திரியின் செய்தித் தொடர்பாளர், இந்த நிகழ்வு கலைத் துறைக்கு ஒரு முக்கியமான மீட்பு மைல்கல் என்று கூறினார்.

WOW நிகழ்ச்சிமின் தலைமை நிர்வாகி டேவிட் டிங்கே, விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்டெர்ன் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

தொற்று பரவலுக்கு முன்பு இருந்ததை விட வணிகம் மீண்டும் வலுவாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரதமராக இருந்த ஹெலன் கிளார்க்கும் WOW மேடையில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.