சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட தேடுதல் வாரண்ட்களை அடுத்து 
காவல்துறையின் கோபால்ட் நடவடிக்கையின் கீழ் ஆக்லாந்து முழுவதும் பல்வேறு இடங்களில் பொலிஸார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் எட்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஒரு திருடப்பட்ட வாகனம், சுமார் நான்கு கிராம் மெத்தாம்பேட்டமைன், 10,000 டொலர்கள் ரொக்கம் மீட்கப்பட்டதுடன் ஒரு மெத்தாம்பேட்டமைன் உற்பத்தி‌ நிலையம் முந்தைய உற்பத்திக்கான ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களில் 46 வயதான ஒருவர் மெத்தாம்பெட்டமைன் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, Waitakere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Head Hunters கும்பல் உறுப்பினரான 44 வயது ஆண் ஒருவர், சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

40 வயதான ஆண், 39 வயதுடைய பெண் மற்றும் 50 வயதுடைய ஆண் ஆகிய அனைவரும் மெத்தாம்பெட்டமைன் உற்பத்தி செய்தல் மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று Waitakere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடைசியாக குற்றம் சாட்டப்பட்டவர் 35 வயதுடையவர். அவர் ஒரு மங்க்ரல் கும்பலைச் சேர்ந்தவர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற வணிகக் கொள்ளை தொடர்பாக அவர் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது.