இரண்டு வாரங்களுக்கு முன்பு கிறிஸ்ட்சர்சில் காரில் மோதுண்டு பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

கிறிஸ்ட்சேர்ச்சைச் சேர்ந்த சீன் வில்லியம் ரஸ்ஸல் இன்னஸ் (45) என்பவர் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

செப்டம்பர் 13 ஆம் திகதி அன்று Linwood Avenue குறித்த சைக்கிள் ஓட்டுநரை கார் மோதியது.

இந்நிலையில் 43 வயதான Ashburton ஐ சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காயத்தை ஏற்படுத்தியதற்காகவும், தகுதியற்ற நிலையில் வாகனம் ஓட்டியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.