முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், முன்னாள் முதற் பெண்மணி அயோமா ராஜபக்ஷவுக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, அவரிடம் 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில், தவறுதலாக குறித்த அழைப்பு வந்திருக்கலாம் என்று எண்ணி, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வரவினால் சந்தேகநபருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதன் பின்னரும் குறித்த சந்தேகநபர் தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கப்பம் கோரியதாகவும், இவ்வாறாக 3 நாட்களில் சுமார் 30 அழைப்புகளை அவர் மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.