South Island இல் உள்ள Burnham ராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெயரை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவ 16 வயதான எலிசபெத் மார்வின் எனவும், அவர் Selwyn ஐ சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிறிஸ்ட்சர்ச்சின் தெற்கே உள்ள குறித்த ராணுவ முகாமில் கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணிக்குப் பின்னர் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தீ சந்தேகத்திற்குறியதாக கருதப்படவில்லை என்று டிடெக்டிவ் சார்ஜென்ட் பிரென்ட் மென்சீஸ் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்