ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கிறிஸ்ட்சர்ச் நபரை பற்றிய தகவல்கள் வழங்குபவர்களுக்கு 20,000 டொலர்கள் வரை வெகுமதி அளிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ரிச்சர்ட் ஹிங்க்லி என்ற குறித்த நபர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று Edgeware இல் உள்ள மெட்ராஸ் தெருவில் உள்ள தனது வீட்டு முகவரியில் காணப்பட்டார்.

அவர் காலை 7.30 மணியளவில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் பேசினார், பின்னர் அவரை காணவில்லை.

அவர் காணாமல் போன சூழ்நிலைகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஸ்காட் ஆண்டர்சன் கூறுகையில்...

"ரிச்சர்ட் ஹின்க்லி காணாமல் போனது குறித்து போலீசார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பதற்கு அவரது குடும்பத்தினருக்கு உறுதியான பதிலை வழங்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.

"கடந்த ஆறு ஆண்டுகளில் அவர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை, அவருடைய வங்கிக் கணக்குகள் தொடப்படவில்லை"

"எனவே அவரது இருப்பிடம் அல்லது அவர் காணாமல் போனதற்கு காரணமான யாருடைய அடையாளத்திற்கும் வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த
வெகுமதி வழங்கப்படும்"

"இந்தச் சலுகை ஜனவரி 31, 2023 வரை நடைமுறையில் இருக்கும்" என அவர் தெரிவித்தார்.

தகவல் தெரிந்தவர்கள் 105 மூலம் பொலிஸைத் தொடர்புகொண்டு 160210/8867 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.