கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆக்லாந்தில் Epsom பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியரை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனநலம் குன்றிய நபர், கொலை செய்யப்பட்டவர்களின் மகன் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இன்று குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான முயற்சியை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் நீதிபதி திமோதி ப்ரூவர், குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் ஷீல் பங்கேரா என தெரிவித்தார்.

மேலும் பங்கேரா ஒரு சிறப்பு நோயாளி என்று அவர் கூறினார், அவர் சமூகத்திற்குத் திரும்புவதற்குத் தகுதிபெறும் முன் அவருக்கு நீண்ட கால சிகிச்சை வழங்கப்படும்.

இறுதியில் திரு பங்கேரா சமூகத்தில் விடுவிக்கப்படுவார்.

"அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களிடமிருந்து அவரது பின்னணி மறைக்கப்படக்கூடாது" என்று நீதிபதி ப்ரூவர் கூறினார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதன் காரணமாக பங்கேரா குற்றமற்றவர் என்று கண்டறியப்பட்டு, மனநல மருத்துவமனையில் அனுமதிக்குமாறு இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.