North Island நகரமான Hastings இல் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அங்குள்ள பள்ளிகள் இன்று முன்னெச்சரிக்கையாக பூட்டப்பட்டது.

காலை 11.30 மணியளவில் Mayfair புறநகரில் உள்ள ஒரு தெருவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தில் யாருக்கும்
காயங்கள் எதுவும் இல்லை, ஆனால் சம்பவத்திற்குப் பிறகு 46 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றினர்.