பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் திட்டங்களுக்கு 5 மில்லியன் டாலர் நிதியுதவியை நியூசிலாந்து அரசு இன்று அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மந்திரி டேவிட் பார்க்கர் கூறுகையில்...

"நியூசிலாந்தில் ஆண்டுதோறும் 509000 டன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது, அதில் 60 சதவிகிதம் பிளாஸ்டிக் மற்றும் பேக்கேஜிங் துறையில் பயன்படுத்தப்படுகிறது.

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் சுற்றுச்சூழலில் நம்பமுடியாத தீங்கு விளைவிக்கும் என்று பார்க்கர் கூறினார்.

"கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு விரைவில் கடலில் உள்ள மீன்களின் அளவை முந்திவிடும், இது ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்."

எனவே இவ்வாறான பிரச்சினைகளை சீர் செய்து நியூசிலாந்து போன்ற பணக்கார நாடுகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றார்.