நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலை இன்று நியூயார்க்கில் சந்தித்து பேசினார்.

இவர்கள் இருவரும் உக்ரைன் போரின் சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தனர்.

இந்நிலையில் பிரதமர் ஆர்டெர்ன் உக்ரைனுக்கு நியூசிலாந்தின் தற்போதைய ஆதரவை வெளிப்படுத்தினார்.

அத்துடன் ரஷ்யாவின் சட்டவிரோத போர் மற்றும் புடினின் சமீபத்திய தீவிரத்தை கடுமையாக கண்டித்தார்.

நியூசிலாந்தின் விரைவான மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்காக உக்ரைன் பிரதமர் ஷ்மிஹால் பிரதமர் ஆர்டெர்னுக்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாட்டு பிரதமர்களின் இந்த கலந்துரையாடல் 30 நிமிடங்கள் நீடித்தது.

இதனையடுத்து நியூசிலாந்து ஊடகங்களுடன் பேசிய பிரதமர் ஆர்டெர்ன், உக்ரைன் படையெடுப்பைச் சுற்றி புடினின் பொய்மைகளை சாடினார்.

இந்த சட்டவிரோத படையெடுப்பிற்கு எதிராக நியூசிலாந்து எப்போதும் உறுதியாக நிற்கிறது என்று பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.