நியூசிலாந்து தமிழ்மொழிக் குழு, தமிழ் மொழியை நியூசிலாந்து கல்வித்துறையில் ஒரு பாடமாக அல்லது மொழியாக அறிமுகம் செய்ய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதன் பொருட்டு நியூசிலாந்தில் தமிழ் பேசும் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை நியூசிலாந்து தமிழ்மொழிக் குழு கடந்த சனிக்கிழமை (13) ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வானது ஆக்லாந்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் இரண்டு உறுப்பினர்கள் வீதம் கலந்து கொண்டனர்.

*நியூசிலாந்து தமிழ் மொழிக் குழு

நியூசிலாந்து தமிழ்ச் சங்கமும் ஆக்லாந்து முத்தமிழ்ச் சங்கமும் இணைந்து நியூசிலாந்து தமிழ் மொழிக் குழுவை உருவாக்கியுள்ளன.

தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இரு அமைப்புகளின் தலைவர்களும் இணைந்து இந்த ஐக்கிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்

தமிழ்ச் சமூகம் அன்புடன் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கும் நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் திரு. மைக்கேல் வுட் அவர்கள் இந்த நியூசிலாந்து தமிழ் மொழிக் குழுவின் புரவலர் என்பது குறிப்பிடத்தக்கது.