இன்று காலை ஆக்லாந்திற்கு தெற்கே இரண்டு டிரக்குகள்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

Pōkeno, Ridge சாலையில் உள்ள வணிக வளாகத்தில் இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த விபத்து ‌காலை 8.30 மணிக்கு முன்பு இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக டிரக் டிரைவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் தீவிர விபத்து பிரிவு இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.