ஆக்லாந்தின் Manurewa வில் சூட்கேஸில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பற்றிய விசாரணையில் அவர்கள் ஆரம்பப் பள்ளி வயதுடைய இரண்டு குழந்தைகளாக இருப்பதாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் டோஃபிலாவ் ஃபாமானுயா வாலுவா கூறுகிறார்.

ஒரு குடும்பத்தினர் ஒரு சேமிப்பு பிரிவில் கைவிடப்பட்ட பொருட்களுக்கான ஏலத்தில் இருந்து ஒரு டிரெய்லர் நிறைய பொருட்களை உள்ளே என்ன இருக்கிறது என்பதை உணராமல் வீட்டிற்கு கொண்டு வந்தனர்

அந்த பொருட்களில் இருந்த‌ ஒரு  சூட்கேஸில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இதில் குடும்பத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மனித எச்சங்கள் பல ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று வாலுவா கூறினார்.

மேலும் இந்த எச்சங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை சேமிக்கப்பட்டிருக்கலாம், என்றார்.

பிரேத பரிசோதனை விசாரணையில் குழந்தைகளை அடையாளம் காண்பதில் சில சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

குழந்தைகள் ஐந்து முதல் 10 வயது வரை இருக்கலாம், என்றார்.

இந்த செய்தி அருகிலுள்ள சமூகங்களுக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று வாலுவா கூறினார்

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நியூசிலாந்தில் தங்கியிருப்பதாக அவர் கூறினார்.

சர்வதேச கிரிமினல் போலீஸ் ஏஜென்சியான இன்டர்போலுடன் இணைந்து போலீசார் தங்கள் கொலை விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.