South land இன் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் செவ்வாய் முதல் வியாழன் வரை பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கைகளை MetService வழங்கியுள்ளது

Motueka விற்கு மேற்கே உள்ள Tasman மாவட்டம், Malborough Sounds, Bryant and Richmond ranges, Buller மற்றும் Canterbury ஏரிகள், புல்லர் மற்றும் வெஸ்ட்லேண்ட் மற்றும் South Island இல் உள்ள Taranaki மலைக்கு ஆரஞ்சு நிற மழை எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் 300 மிமீ முதல் 500 மிமீ வரை மழை பெய்யும் என்று MetService எதிர்பார்க்கிறது.

கனமழையால் வெள்ளம் மற்றும் சரிவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மான் மாவட்டம் போன்ற சில பகுதிகளில் 700மிமீ முதல் 800மிமீ வரை மழை எதிர்பார்க்கலாம்.

Northland ஐ பலத்த காற்று மற்றும் மழை தாக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

Northland இற்கான கனமழை கண்காணிப்பு புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை நீடிக்கும்.

வலுவான காற்று கண்காணிப்பு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை இருக்கும்.

மேற்பரப்பு வெள்ளம் மற்றும் சறுக்கல்கள் விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.